×

விவசாயிகள்14வது தவணை தொகை பெற 27ம் தேதி வரை சிறப்பு முகாம்

 

திருவள்ளூர்: விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கௌரவ நிதி உதவி திட்டத்தில் 14 வது தவணைபெற வரும் 27ம் தேதிவரை சிறப்பு முகாம் நடக்கிறது. பிரதம மந்திரி கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருட்கள் கொள்முதல் செய்வதற்காக உதவி தொகையாக விவசாய குடும்பங்களுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் என 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை, இந்த திட்டத்தின் கீழ் 13 தவணை உதவி தொகை தகுதியான விவசாயிகளின் வங்கி கணக்கில் வழங்கப்பட்டுள்ளது. 14வது தவணை தொகை வரும் மாதத்தில் விடுவிக்கப்பட உள்ளது. இந்த தொகையினை பெற நில ஆவணங்கள் பதிவேற்றம். கேஒய்சி பதிவேற்றம் மற்றும் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்தல் ஆகிய விதிமுறைகளை அரசு கட்டாயப்படுத்தி உள்ளது.

இதுவரை, நில ஆவணங்கள் பதிவேற்றம், கேஒய்சி மற்றும் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்தல் ஆகியவற்றினை செய்யாமல் உள்ள பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள் இணைத்தல் வேண்டும். அப்படி இணைத்தால் மட்டுமே அடுத்த தவணை பி.எம்.கிசான் நிதி உதவித்தொகை கிடைக்கும். மேலும், அனைத்து வட்டாரங்களிலும் வரும் 27ம் தேதி வரை சிறப்பு முகாம் சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலர்கள் அலுவலகத்தில் வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் பி.எம். கிசான் திட்ட பயனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டு கொண்டுள்ளார்.

The post விவசாயிகள்14வது தவணை தொகை பெற 27ம் தேதி வரை சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Prime ,
× RELATED மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில்...